இனிமேல் போராடி திட்டங்களை பெற வேண்டியதில்லை, கேட்டாலே கிடைக்கும் என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு..!
Minister EV Velu says that there is no need to fight and struggle to get schemes from now on you can get them if you ask
அரசு பள்ளிகளை போல, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திராவிடர் என்பதை முதன் முதலில் உயர்த்தி பிடித்து, செயல்பட்ட அயோத்திதாசர் பண்டிதரின் உருவப்படத்தை இந்த சட்டசபையில் வைக்க வேண்டும் எனவும், அதேபோல் நெல்லையில் ஒரு பெரிய நூலகத்தை ஏற்படுத்தி அதற்கு காயிதே மில்லத் பெயரை வைக்க வேண்டும் என்று சட்டசபையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஷாநவாஸ் தெரிவித்தார்.

அத்துடன், 'அரசு பள்ளிகளை போல, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களும் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு திட்டத்தையும் அவர்கள் போராடி, போராடி பெற வேண்டிய நிலை இருக்கிறது' என்றும் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, இதற்கு மேல் போராடி, போராடி திட்டங்களை பெற வேண்டியதில்லை என்றும், கேட்டாலே கிடைக்கும் என்றும் இன்றைக்கு அரசு பள்ளிகளை தாண்டி மற்ற பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister EV Velu says that there is no need to fight and struggle to get schemes from now on you can get them if you ask