நகை கடன் தள்ளுபடி.. மீண்டும் ஒரு வாய்ப்பு.! அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்குள் நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதையடுத்து, தகுதியான நபர்களை கண்டறிவதற்காக நகை கடன் பெற்றவர்களின் பெயர், கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர்களின் குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு விதிமுறைகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நகை கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகை கடன் மூலம் பல கோடியில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடியில் உண்மையான ஏழை-எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பது அரசின் நோக்கம். 

48.84 லட்சம் நகை கடன்களில் 7.65 லட்சம் நகைகடன்கள் 40 கிராமிற்கு மேலானவை. 21.63 லட்சம் கடன்கள் ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் 40 கிராமிற்கு மேல் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.20 லட்சம் நகை கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளது. 15.2 லட்சம் கடன்களில் விதிமீறல்கள் நடந்துள்ளது. 22,52,226 கடன்தாரர்களில் தற்போது 10,18,066 கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை. 

சரியான விவரங்களை அளித்த பின்னரே சரிபார்க்கப்பட்டு ஆய்வு அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister i periyasamy press meet about gold loan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->