குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளை குரங்கு அம்மை தொற்று கடுமையாக மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளின் பரவிய இந்த குரங்கு அம்மை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வேகமாக பரவியது. தற்போது தெற்காசிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரளாவில் தான் முதல் முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பி நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு டெல்லியில் ஒருவருக்கு குரங்கமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானாவில் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது.

சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அமைத்துள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ma Subramanian press meet for Monkey Pox


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->