#BREAKING : விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!
Minister meiyanathan admitted hospital
அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன். இவர் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் நேற்று வந்துள்ளார். அப்போது ரயிலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்து கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
English Summary
Minister meiyanathan admitted hospital