நாடாளுமன்றத்தில் தூங்கும் எம்.பிக்கள்.. வாயை விட்ட நாசர்.. திமுகவில் வெடித்தது புதிய சர்ச்சை..!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழா மேடையில் பேசிய நாசர் "திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மட்டுமே நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டு மத்திய அரசை மிரள வைக்கிறார். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கி விட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசுவதற்கு நேரம் கொடுக்கப்பட்டால் எல்லாரும் அலறுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய கேள்விகள் வலிமையானதாக இருக்கும்" என பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர் நாசர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவடி தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் வருவதால் தனது தொகுதியில் எம்.பியை புகழ வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரை புகழ்ந்துள்ளார்.

அதேசமயம் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கி விட்டு வருவதாக கூறியிருப்பது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. அமைச்சர் நாசர் என்றாலே சர்ச்சை, சர்ச்சை என்றால் அமைச்சர் நாசர் என்ற போக்கில் தொடர்ந்து பொதுவெளியில் நடந்து கொள்வது திமுகவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister nasar said all MPs are sleeping in Parliament


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->