பழனிச்சாமிக்கு பதம் பார்க்க தெரியவில்லை! ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்த அமைச்சர் பெரியகருப்பன்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து மனு அளித்த பிறகு செய்திகளை சந்திப்பில் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை அடக்கினார். இன்றைய செய்தியாக சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டுக்கு ஊரக வளர்ச்சி துறை சார்பில் அறிக்கை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இன்று செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து பட்டியலிட்டார். 

அப்போது பேசிய அவர் "நம்ம ஊரு சூப்பரு இயக்கம் என்ற ஊரக வளர்ச்சி துறை சார்பில் கொண்டாடப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் நேற்று முன்தினம் பொதுவெளியிலும் ஆளுநர் இடத்தில் கொடுத்த மனுவிலும் ஊழல் நடைபெற்றதாக குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். அது பற்றி நேற்று முன்தினமே அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமான பதிலை தந்திருக்கிறார். 

அதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தலைமைச் செயலாளர் அவர்கள் நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டு அதில் என்ன நடந்தது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சியில் முடிக்கப்பட்டுள்ள பணிகளைப் பற்றி விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறார். அத்தகைய விளம்பரங்களை அவர்களுடைய ஆட்சி காலத்தில் செய்திருக்கிறார்கள். இப்பொழுது இந்த விளம்பரம் என்பதை மக்களிடத்திலே விழிப்புணர் ஏற்படுத்துவதற்காக தூய்மை இயக்கத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்காக கிராம சபை கூட்டங்களுக்கு அச்சிடப்பட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் வேண்டுமானால் பேனர்களில் ஊழல் செய்திருக்கலாம். இதை அவர்களால் மறுக்க முடியாது. குறிப்பாக பழனிச்சாமி குறிப்பிட்டது போல உள்ளாட்சியில் செய்யப்பட்ட பணிகளுக்காக கடந்த ஆட்சி காலத்தில் ரூ2,800 மதிப்பீட்டு கொண்ட பேனர்களை அனைத்து ஊராட்சிகளிலும் அதிமுக ஆட்சி காலத்தில் நிறுவினார்கள். அதற்காக அவர்கள் ரூ.28 ஆயிரம் பில் போட்டு உள்ளனர். 

அதேபோன்று 20 வாட்ஸ் எல்.இ.டி பல்ப் ஒன்றின் விலை 500 ரூபாய் இருக்கும். 500 ரூபாய் விலை கொண்ட எல்.இ.டி பல்புக்கு ரூ.5000 பில் போட்டுள்ளனர். அதேபோன்று 90 வாட்ஸ் பல்புகள் ரூ.6,000 பில் போட்டு எடுத்தவர்கள் தான் இப்பொழுது திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று பழனிச்சாமி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். அவருக்கு முறையாக பதம் பார்க்க தெரியவில்லை. நேற்று ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒரு பேனரின் விலை ரூ.611 என்ற விலையில் ஜி.எஸ்.டி வரி உட்பட என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ரூ.7,906 ரூபாய் என பழனிச்சாமி கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்பதை நான் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Periya Karuppan response to Palaniswamis corruption allegations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->