சந்திரயான்-3 கூட நிலாவுக்கு போயிருச்சு.. ஆனா பிரதமர் இன்னும் மணிப்பூருக்கு போகல..! அமைச்சர் பொன்முடி கிண்டல்.!!
Minister ponmudi criticized PMModi
கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, பயணியர் குடைதிறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பொன்முடி விழா மேடையில் பேசிய போது "ஒருத்தர் நடைபயணம் போய்க் கொண்டிருக்கிறார்.

தினமும் செல்பவர்களே மீண்டும் நடை பயணம் செல்கிறார்களே தவிர புதிதாக யாரும் நடை பயணத்தில் இணையவில்லை. எதற்கு இந்த நடை பயணம்? நடை பயணம் சென்று மத வெறியை தூண்டி விடுவதற்காக? இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே அது இவர்களுக்கு பிடிக்கவில்லையா.?
சந்திராயன்-3 விண்கலம் நிலவில் இறங்கிவிட்டது. ஆனால் இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடியவர் மணிப்பூரில் நடக்கின்ற கொடுமையை கூட சென்று பார்க்காமல் வெளிநாட்டிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.

மத வெறியை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்ற அந்த ஒன்றிய அரசிற்கு நீங்கள் புத்தி புகுட்ட வேண்டும். விரைவிலேயே தேர்தல் வரவிருக்கிறது. அதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்பாட்டில் தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இண்டியா என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது" என விழா மேடையில் பேசியுள்ளார்.
English Summary
Minister ponmudi criticized PMModi