மத்திய பட்ஜெட்டின் தமிழக அரசின் கோரிக்கை என்ன - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பங்களிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் 2023 - 2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, தமிழகத்துக்கு உரிய ரயில்வே திட்டங்களை வழங்க வேண்டும்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணியை மத்திய, மாநில அரசுகள் என இரு தரப்பும் 50-50 என்ற பங்களிப்பின் அடிப்படையில் ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் பட்ஜெட்டிலேயே ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடைவெளியை களைய வேண்டும். இரு அரசுகளும் தலா 49% பங்களிப்பை அளிக்க வேண்டும். தமிழகத்துக்கான ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்" என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுயுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister PTR Central Govt Budget 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->