துரோகி பாஜக மீது அதிமுகவுக்கு பாசம்! வெளுத்து வாங்கிய திமுக தரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய சட்டப் பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீதான வாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அணி நோக்கி 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக காவிரி தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை? ஏன் நாடாளுமன்றத்தில் கொடுக்கவில்லை? கூட்டணியில் ஏன் வச்சிருக்கீங்க? எங்க ஆட்சியில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் மீது அவதூறு வழக்கு தொடுத்தோம். அந்த துணிச்சல் எங்களுக்கு இருந்தது. ஏன் உங்களுக்கு இல்லை? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் சட்டப்பேரவையில் அனல் பறந்தது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விலகியும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமிக்கு அடிப்படை புரிதல் கூட இல்லை. கர்நாடகம் தமிழகம் இடையே நேரடி மோதலை தடுக்கவே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஆனால் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மத்திய பாஜக அரசை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி துடிக்கிறார். கூட்டணியில் இருந்து விலகியும் பாஜக மீதான பாசம் அதிமுகவுக்கு தொடர்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது" என எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ragupathi criticized AIADMK EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->