அமைச்சர் ராஜகண்ணப்பன் செயலுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கண்டனம்.! - Seithipunal
Seithipunal


அமைச்சர் ராஜகண்ணப்பன் செயலுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த கண்டன அறிக்கையில், "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரின் கேள்விக்கு பதில் கூறாமல் அவருடன் சென்ற ஒளிப்பதிவாளரின் கேமராவை தாக்கிய காட்சிகள் நேற்று (31-03-2022) வெளியானது. இது குறித்து அந்த பெண் நிருபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

மிகவும் உயரிய மக்கள் பணியில் இருக்கும் அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் அவர்களின் இந்த செயல் கண்டனத்திற்கு உரியது ஆகும்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலத்  தலைவர் இளசை S கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு மற்றும் அனைத்து நிர்வாகிகளின் சார்பாகவும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், வரும் காலங்களில் இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறாமல் இருக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister rajakannappan issue march


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->