தமிழகத்தில் போதை பொருளே இருக்க கூடாது என்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் - அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு மே 23-ம் தேதி வரை 799.8 டன் போதைப் பொருட்களை காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு பாதுகாப்பு துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழத்தில் குட்கா விற்பனை செய்த மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே சட்டபேரவையில் குட்கா இருக்கக் கூடாது என்று சுட்டிக் காட்டியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழத்தில் எந்த இடத்திலும் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணமாக உள்ளது. இதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" என்று அமைச்சர்  ம  சுப்பிரமணியன் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister say about tn kutka issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->