அடுத்தடுத்து சிக்கும் திமுக கொடி - ஈசிஆர் சாலையில் தொடரும் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் கடந்த 25ஆம் தேதி இரவு இளம்பெண்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்த போது, அவர்களது காரை 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் வழிமறித்ததுடன், இளம்பெண்களையும், அவருடன் வந்தவர்களையும் அச்சுறுத்தும் வகையில் காரை விரட்டிச் சென்றனர். 

இதனால், பயந்துபோன பெண்கள் அலறி கூச்சலிட்டனர். திமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்த இளைஞர்கள், இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த  வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், திமுக கொடிக் கட்டிய இரண்டு சொகுசு கார்கள் சென்னை ஈசிஆர் சாலையில் ரேஸில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இரண்டு கார்களும் போட்டிப் போட்டுக்கொண்டு சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்ததுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two car race in chennai ecr with dmk flag


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->