அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி..! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

தற்போது இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரை பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அத்துடன்,இந்த சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது. 

இதன்படி எதிர்வரும் 06-ஆம் தேதி புழல் சிறையிலிருந்து தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வர சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court allows voice sample test on Gnanasekaran


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->