பேனா நினைவுச் சின்னம்... வயிற்றெரிச்சல் பிடித்த கோமான்கள், சீமான்கள் எதிர்க்கலாம் - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!
Minister Sekarbabu criticizes pen memorial opponents
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "தமிழக மக்களிடையே இருந்த அறியாமையை போக்கி தன்னுடைய பேனா முனையினால் 21ம் நூற்றாண்டில் இவையெல்லாம் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய தலைவர் இந்திய அளவல் இருந்தார் என்றால் அது கலைஞர் கருணாநிதி அவர்கள் மட்டும் தான்.
அவருக்கு பேனா சிலை வைப்பதில் ஒரு சில வயிற்றெரிச்சல் பிடித்த கோமான்கள் சீமான்கள் வேண்டுமானால் எதிர்க்கலாம். ஆனால் ஒட்டுமொத்த தமிழினமும் இன்றைக்கு அந்த பேனா சிலை வைப்பதை வரவேற்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த இடத்தில் பேனா சிலை வைப்பதால் மீனவ சமுதாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என எடுத்துக் கூறியதற்கு பிறகு மீனவர் சமுதாயத்தில் உள்ள அனைவரும் பேனா நினைவுச் சின்னத்தை வரவேற்கிறார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் வயிற்றெரிச்சலில் இருப்பவர்கள் ஒரு சிலர் எதிர்ப்பதை நாங்கள் பெரிதாக கருதவில்லை" என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
English Summary
Minister Sekarbabu criticizes pen memorial opponents