முதலமைச்சர் ஸ்டாலின் அன்பாகவும் இருப்பார், அடிபணியவும் வைப்பார் - அமைச்சர் சேகர்பாபு.! - Seithipunal
Seithipunal


திராவிட மாடல் ஆட்சி என்பதை நாளுக்கு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரூபித்து வருவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ரூபாய் 300 கோடி செலவில் திருப்பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதுதான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி. திமுக இந்துக்களின் விரோதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தாலும் நாங்கள் இந்துக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறோம்.


மேலும், அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், இது திராவிட மாடல் ஆட்சி என்பதை வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் செயலிலிலும் செய்து காட்டி வருகிறோம் என்று கூறியுள்ளார்.மேலும், இனத்தால், மதத்தால், மொழியால் கலவரத்தை உருவாக்கி பிரச்சனைகளை ஏற்படுத்துவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. உண்மையான திராவிட மாடல் ஆட்சியை வழங்குவதற்காக எங்கள் முதலமைச்சர் அன்பாகவும் இருப்பார், அடி பணியவும் வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இனத்தால், மதத்தால், மொழியால் கலவரத்தை உருவாக்கி பிரச்சனைகளை ஏற்படுத்துவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. உண்மையான திராவிட மாடல் ஆட்சியை வழங்குவதற்காக எங்கள் முதலமைச்சர் அன்பாகவும் இருப்பார், அடி பணியவும் வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sekarbabu speech about Dravidian model


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->