இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் குறைவு.. அமைச்சர் செந்தில் பாலாஜி .!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18-ஆம் தேதி அறிவித்தார். கடந்த 10 வருடங்களில் மின்சார துறையின் கடன் ரூபாய் 12647 கோடியாக உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். 42% மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இருக்காது என தெரிவித்து இருந்தார்.  மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டுமென தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister senthil balaji press meet for electricity


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->