'ஆம்னி பஸ் கட்டணம் அதிகம்னு தெரிஞ்சும் அதுல போறாங்க.' 'ஏழைகளுக்கு அரசு பஸ் இருக்கு.' அமைச்சர் சிவசங்கர்.!  - Seithipunal
Seithipunal


ஆம்னி பேருந்து கட்டண உயர்வு குறித்து புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்து பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு பேருந்து கட்டணத்துடன் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிட வேண்டாம். இது தவறான கண்ணோட்டம். மக்களின் சேவைக்காக அரசு பேருந்து இயங்குகிறது. ஆம்னி பேருந்துகள் அப்படி இல்லை. 

தனியார் ஒப்பந்த வாகனங்களா இந்தியா முழுவதும் கட்டண விகிதத்துடன் ஆம்னி பேருந்துகள் இயங்குகிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கான சேவையை அரசு வழங்குகிறது. கூடுதல் சேவை வேண்டும் என்பவர்கள் தான் ஆம்னி பேருந்தை நாட செல்கின்றனர். அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து கட்டண நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. இந்தியா முழுவதும் இதுதான் நிலை. எனவே தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் இன்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். இரண்டொரு நாளில் இந்த கட்டணம் குறித்த அறிவிப்பை தெளிவாக அவர்கள் அரசிடம் கூறுவார்கள். 

மக்கள் தரப்பிலிருந்து நான் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். தமிழக அரசு சார்பில் 21,000 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆம்னி பேருந்தின் கட்டண விபரம் தெரிந்தும் கூட அதில் பயணிப்பவர்கள் தான் அதிகம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister sivasankar about Omni Bus ticket Fees 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->