17000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்! அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!
Minister Theni jayakumar say about 1000 scheme
புதுச்சேரியில் 17 ஆயிரம் ஏழை குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-2023 ஆம் ஆண்டு புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அறிவிப்பு தொடர்பான ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "புதுச்சேரி அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை இதுவரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது.
மேலும், அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி முடிந்த பிறகு, அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்" என்று தெரிவித்தார்.
English Summary
Minister Theni jayakumar say about 1000 scheme