கிரானைட் முறைகேடு., மு.க.அழகிரியின் மகன் மனு தள்ளுபடி.! ஆறு மாசம் கெடு விதித்த உயர்நீதிமன்றக் கிளை.! - Seithipunal
Seithipunal


மதுரை : கிரானைட் கற்களை வெட்டி எடுத்தாக முன்னாள் மத்திய அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

துரைதயாநிதி மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில், சட்டவிரோத கிரானைட் கற்களை வெட்டி, அரசுக்கு 259 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, துரை தயாநிதி, உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துரைதயாநிதி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், இந்த மனுவை நேற்று விசாரணை செய்த நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும்,  துரைதயாநிதி மீதான இந்த வழக்கின் மீதான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK ALAGIRI SON CASE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->