#சற்றுமுன் | மகளிருக்கான மாதாந்திர ₹.1000 உதவித்தொகை எப்போது.?! ஸ்டாலின் திட்டவட்டம்.!  - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின், "தமிழகத்தின் நிதிநிலை சீரானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "தமிழகத்தில் பெண்களுக்கான நலனில் திமுக அரசு அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிருக்கான இலவச பேருந்து முதல் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

பால் விலை மற்றும் பெட்ரோல் விலை உள்ளிட்டவை வாக்குறுதிகள் கொடுத்த படி குறைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தொகுதியாக இருந்தாலும் அதில் திமுக தனது பங்கை, கடமையை சரியாக செய்து வருகிறது. 

மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே  அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். இது தான் திராவிட மாடல் ஆட்சி" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk stalin about Home makers fund


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->