உதயநிதியை பார்த்து கூடவா பயம் வரல.? மு.க.ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு இன்று பேசினார். அப்போது, அவர் ,"ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்று கூறினார்கள். இதுவரை அது நிறைவேறி இருக்கா? 

15 லட்சம் இல்ல ஒரு 15 ஆயிரமாவது இல்ல? 15 ரூபாயாவது போட்டு இருக்காங்களா? நமது நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவர் அருமை தங்கை கனிமொழி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு என்று கேட்டார்கள். 2023 பட்ஜெட்டில் ஏன் இது குறித்து அறிவிக்கவில்லை? 

பிரதமராக இருக்கக்கூடிய மோடியே வந்து மதுரையில் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு போய் இருக்கிறார். ஆனால், இதுவரைக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சினே தெரியல. ஒரு செங்கல்லை வைத்துக்கொண்டு தம்பி உதயநிதி தமிழக முழுவதும் கடந்த தேர்தலில் சுற்றி வந்த கதையை எல்லாம் நீங்களே பார்த்து இருப்பீர்கள்.

அதன் பிறகு கூட வெட்கம் வரவில்லையா? மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வருமே தம்பி இன்னொரு செங்கல் கல்லை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவான் என்ற பயம் உங்களுக்கு வரக்கூடாதா?." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mk Stalin ask To Modi aBout aims and udhayanithi 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->