'அறிவுமுடியான பொன்முடி' பொதுக்குழு மேடையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்.!  - Seithipunal
Seithipunal


திமுகவின் உட்கட்சித் தோ்தல் நடைந்து முடிந்த நிலையில், சமீபத்தில் 71 மாவட்டச் செயலாளா் பதவியில், 64 மாவட்ட செயலாளா்கள் பதவியில் மீண்டும் அதே நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில் 7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் தான் புதியதாக நியமிக்கப்பட்டிருப்பது.

தொடர்ந்து, தி.மு.க. தலைவா், பொருளாளர், பொதுச் செயலாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்பியவர்கள் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக கட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்தார். 

அதன் படி அக்டோபர் 9-ஆம் தேதியான இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கின்ற பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடக்கின்ற பொதுக்குழுக் கூட்டத்தில் போட்டியின்றி 2- வது முறையாக மீண்டும் அவரே திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஸ்டாலின் பேசிய போது, " திண்டுக்கல் வீரர் கழகத்தின் தீரர் ஐ.பி, நேருவிற்கு நிகர் நேரு, கலைஞரால் அறிவுமுடி என போற்றப்பட்ட பொன்முடி, அடித்தள மக்களுக்காக அயராது உழைக்கும் அந்தியூர் செல்வராஜ், கலைஞரால் தகத்தாய சூரியன் எனப்பட்ட ஆ.ராசா, டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி." என்று வர்ணித்து புகழ்ந்தவாறு தனது உரையை துவங்கியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk Stalin in dmk generel counsile meeting 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->