முதல்வர் ஸ்டாலினின் பதிவு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது - ஆளுநர் ஜகதீப் தன்கார் பதில்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கார் நேற்று அறிவித்து இருந்தார்.

இதுகுறித்து ஆளுநரின் டிவிட்டர் பதிவில், "அரசமைப்புச் சட்டத்தின் 172-2ஏ பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், மாநில சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறேன். இது இன்று முதல் அமலுக்கு வரும்" என்று ஆளுநர் ஜகதீப் தன்கார் தெரிவித்து இருந்தார்.

ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில், "மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.

அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் குறியீட்டு தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது." என்று முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்குவங்க சட்டசபையை முடக்கியதாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் பதிவு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று, ஆளுநர் ஜகதீப் தன்கார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்றுதான் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது என்றும் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin vs west bengal governor 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->