அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து மு.க ஸ்டாலின் பதறுவது ஏன்? நீங்கள் கூட்டணி வைத்தால் இனிக்கும்... நாங்கள் வைத்தால் கசக்கிறதா? - EPS - Seithipunal
Seithipunal


ஆளுங்கட்சியின் எதிர்க்கட்சி தலைவர் 'எடப்பாடி பழனிசாமி', தமிழக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை, அதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என அமைச்சர் தெரிவிக்கிறார். குடிநீரில் கழிவுநீர் வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புகார் வந்தவுடன் குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.திருவிழாவில் வழங்கிய மோர், குளிர்பானத்தால் தான் பிரச்சனை என அமைச்சர் தெரிவிக்கிறார்.

கோவில் திருவிழாவுக்கு பலரும் சென்ற நிலையில் உறையூர் மக்களுக்கு மட்டும் பாதிப்பு ஏன்? குளிர்பானம் தான் பிரச்சனை என்றால் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஏன் பாதிப்பு இல்லை.அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் பதறுவது ஏன்? பயப்படுவது ஏன்?

யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்.திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வுக்கு அறிவிக்கை வெளியானது.

நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது தான்.நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., தடுத்து நிறுத்த முயற்சித்தது அ.தி.மு.க.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் தெரிவிக்கிறார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏன் நீட் தேர்வை தடுக்கவில்லை.பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா? " எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin worried about AIADMK BJP alliance you form alliance will be sweet if we form one it will be bitter EPS


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->