ஒருங்கிணைந்து செயல்பட எதிர்நோக்குகிறேன் - சந்திரபாபுவை வாழ்த்திய முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான ஜன சேனா மற்றும் பாஜக கூட்டணி மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றது.

இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இன்று ஆட்சியையும் அமைத்துள்ளது.

ஆந்திராவில் உள்ள விஜயவாடாவின் புறநகர்ப் பகுதியான கண்ணாவரத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஓபிஎஸ், நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, நடிகர் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவி ஏற்க, ஜனசேன கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நான்காவது முறையாக ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி ஆந்திரா மாநிலத்திற்கு வளர்ச்சி, வளத்தை கொண்டு வரட்டும். ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையிலான உறவை வலுப்படுத்தவும், இருமாநில வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவும் எதிர்நோக்குகிறேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin wish Chandrababu Naidu 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->