ஆளுநரின் சுதந்திர தின விழா தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.!! மு.க ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு.!!
MKStalin boycotting Governor Independence Day tea party
சென்னை குரோம்பேட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வரும் நிலையில் போதிய மதிப்பெண் பெறாததால் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதான் மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் அவருடைய தந்தையும் நேற்று தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் தற்போது வரை மாணவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டு வந்த நிலையில் தற்போது மாணவனின் பெற்றோர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது அறிக்கையின் மூலம் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு சில மாதங்களில் ஏற்படும் அரசியல் மாற்றத்தால் நீட் தேர்வு எனும் தடுப்புச் சுவரை பொலபொலவென உதிரும் எனவும், கையெழுத்து போட மாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மற்றும் பிரபலங்களுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி சார்பாக தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் - உயர் கல்வித் துறையைக் குழப்பியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை பெற்றோர்களை அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று ஆளுநர் மாளிகையில் அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் ஆளுநரின் செயல்பாடுகளால் அவர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
MKStalin boycotting Governor Independence Day tea party