முதல்வர்களுக்கு திதி கொடுப்பதில் போட்டி! காவிரி விவகாரத்தால் அரங்கேறிய கூத்து! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த வழக்கு விசாரித்த காவாய், மிஸ்ரா மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட முடியாது என கூறியதோடு தமிழகத்திற்கு உயரிய நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில முழுவதும் கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றன. இதற்கு பாஜக, மஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலை கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, திதி கொடுத்து, ஒப்பாரி வைத்து கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதன் காரணமாக பெங்களூர் நகரின் தமிழர்கள் வாழும் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

இதற்கு போட்டியாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நிதி கொடுத்து, ஒப்பாரி வைத்து தமிழக விவசாய சங்கத்தினர் ஈரோட்டில் போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து திதி கொடுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவகாரத்தால் இரு மாநில முதல்வர்களுக்கும் மாறி மாறி இறுதி சடங்கு செய்த சம்பவம் நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin Siddaramaiah gave titi in cauvery issue protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->