மோடி கன்னியாகுமரி சென்று நாடகம் போடுகிறார் - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!! - Seithipunal
Seithipunal


அரசியலையும் மதத்தையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது . அது இரண்டுமே தனித்துதான் இருக்க வேண்டும். மோடிக்கு இறை நம்பிக்கை இருந்தால் வீட்டிலே தியானம் செய்யலாம் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறிவுள்ளார்.

இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்திலையில், பிரதமர் மோடி நேற்று பஞ்சாப்பில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு, பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பொது , நேராக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்து தியானத்தில் ஈடுபட்டு கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், கன்னியாகுமரியில் சென்று நாடகம் போடுகிறார். அவ்வளவு காவலர்கள் பணியில் உள்ளதால் நாட்டின் பணம்தான் வீணாகிறது. இதனால் நாட்டுக்குத்தான் தீங்கு. உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலே இருந்து தியானம் செய்யலாம் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, அரசியலையும் மதத்தையும் ஒருபோதும் இணைக்க கூடாது. அது இரண்டுமே தனித்துதான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றோரு மதத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு எதிராக இருக்கலாம் . அதனால், மதம் சார்ந்த உணர்வுகளை தேர்தலுடன் இணைப்பது தவறானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi goes to Kanyakumari and plays Mallikarjuna Kharge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->