மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார் - காங்கிரஸ் ஜெயராம் ரமேஷ்!! - Seithipunal
Seithipunal


காந்தி வாழ்க்கை வரலாறு படம் மூலமாகவே காந்தியை உலகம் தெரிந்து கொண்டதாக சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடி கூறி இருந்த நிலையில், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

 மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. ஜூன் ஒன்றாம் தேதி கடைசி கட்ட மக்களவைத் தேர்தலும், அதனை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

 இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமாரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்ய நாளை தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி மகாத்மா காந்தி பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

 மகாத்மா காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார். 1982-க்கு முன் மகாத்மா காந்தி அங்கீகரிக்கப்படாத உலகில், வெளியேறும் பிரதமரான நரேந்திர மோடி வாழ்கிறார் போலும். வாரணாசி, டெல்லி, அகமதாபாத்தில் காந்திய நிறுவனங்களை அழித்தது நரேந்திர மோடி அரசுதான் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi is destroying Mahatma Gandhi legacy Congress Jayaram Ramesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->