பருவமழை எச்சரிக்கை!...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது ஆய்வுக் கூட்டம்!
Monsoon warning the study meeting started under the leadership of chief minister mk stalin
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதை யொட்டி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்பு உள்ளதால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
English Summary
Monsoon warning the study meeting started under the leadership of chief minister mk stalin