முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை எதிரொலி : இன்று முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சுதந்திர போராட்ட வீரர் தெய்வீக  திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தமிழ்நாட்டில் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் இவர், சமூக சீர்திருத்தவாதி, அனைவருக்குமான அரசியல் தலைவராக திகழ்ந்தார்.

தமிழ்நாட்டில் சமூக அரசியலில் பெரும்  மாற்றத்தை ஏற்படுத்தியதோடு தனது வாழ்நாள் முழுவதும் ஜாதி, மத வேறுபாடுகளை களைத்து அனைவரும் சமம் என்ற சமூக நீதி கொள்கையை பரப்பி வந்தார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளை  கொண்ட தெய்வீக  திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை ஆண்டு தோறும் அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக  கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையே, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், பசும்பொன் திருமகனாரின் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்குப் பதிலாக, இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு இதே நாளில் அறிவித்தேன்.
 
அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் ரூ. 1.55 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை இன்று திறந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை யொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthuramalinga devar gurupooja echo today chief minister mk stalin inaugurated the muthuramalinga devar arenamuthuramalinga devar arena


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->