10,000 ஓட்டு கூட தாண்டல! கண்கலங்கியபடி வெளியேறிய நாதக வேட்பாளர் அபிநயா!
Naam Tamil Party candidate Abhinaya walked out of the counting center in dismay
விக்கிரவண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கண் கலங்கியபடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி இடத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி இடை தேர்தலில் பாமக சார்பில் சி அன்புமணி, திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதுவரை 12 சுற்று முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 76,692 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் சி அன்புமணி 32, 974 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெறும் 5918 வாக்குகள் பெற்று உள்ளார்.
இந்த நிலையில் நினைத்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்திலிருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா கண்கலங்கியபடி வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
English Summary
Naam Tamil Party candidate Abhinaya walked out of the counting center in dismay