அதிமுக,பாஜகவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் மூன்றாவது இடம்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் 8 நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்து முன்னிலை வகிக்கிறது நாம் தமிழர்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆலயம் அறிவித்தபடி ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கி ஜுவல் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 38 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 1 தொகுதியிலும் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 1 இடத்திலும்  முன்னிலை வகித்து வருகிறது.

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் கணிசமான வாக்கை பெற்றுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி கணக்கை தொடங்கவில்லை என்றாலும், எட்டு நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி 8 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் பெற்று முன்னிலை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naam Tamilar Party is third in 8 seats behind AIADMK and BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->