அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்பது அவசியம்.. நயினார் நாகேந்திரன்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒற்றை தலைமை பூதாகரமாக வெடித்து உள்ள நிலையில், தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் 8-வது நாளாக ஓபிஎஸ் - இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு ஆகியோர் எடப்பாடிபழனிசாமியையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில்  ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 

ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்காததால், இறுதிக் கட்டமாக பொதுக்குழுவை வைக்கும்படி எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி இடம் இருந்து பதில் வரவில்லை. 

இதனிடையே,  அதிமுகவை வீழ்த்த சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சிக்கின்றனர். இந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் என தெரிவித்துள்ளார். பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. நானே முன்னின்று காத்து நிற்பேன் எனவும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில்  எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்நிலையில், அதிமுகவிற்கு ஒன்றை தலைமை அவசியம் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றை தலைமை தொர்பாக அதிமுகவில் நடக்கும் சர்ச்சைகள் குறித்து பாஜக கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறை என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nainar negenthiran says about admk issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->