அந்தர் பல்டி அடித்த நயினார் நாகேந்திரன்.. ஆண்மை விவகாரம்.! புதிய விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உள்ளது. ஆனால் இந்த நான்கு ஆண்டுகள் அவர்கள் ஆட்சி நீடிக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது. அதற்குப் பின்பும் அவர்கள் கட்சியின் நீடிக்காது. 

சட்டமன்றத்தில் ஆளுமையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. நான்கு பேர் இருந்தாலும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினையை பாஜகதான் பேசுகிறது. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் ஊடகங்களுக்கு துணிச்சலோடு பேட்டி அளிப்பவர் அண்ணாமலை மட்டுமே என தெரிவித்துள்ளார். 

நயினார் நாகேந்திரன் இந்த பேச்சு அதிமுக மத்தியில் சலசலப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nainer nagendran explains for admk issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->