தமிழை அழிக்கும் தமிழிசை..! மத்திய அரசால் இது முடியுமா..!! நாராயணசாமி கேள்வி..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் செயல்படும் அரசு பள்ளிகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இணைய இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வர மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் செயலில் துணைநிலை ஆளுநர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு தானா..? சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழ் பாடம் இருக்காது. தமிழ் மொழியுடன் கூடிய சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவிக்குமா..? 

தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் வேலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இறங்கியுள்ளார். தமிழிசை தனது அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தான் முதல்வர் ரங்கசாமி ஆதங்கப்படுகிறார். சுதந்திரமாக செயல்பட விடாத வரை தட்டிக் கேட்க திராணியற்றவர் ரங்கசாமி. ஆளுநராக இருக்கும் தமிழிசை எத்தனை கோப்புகளுக்கு கையெழுத்திட்டார் என்பதை பட்டியலிட்டு மக்களிடம் பகிரங்கமாக சொல்ல வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் நாராயணசாமி பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanasami said Governor Tamilisai tries to destroy Tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->