புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தான்! ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை பாஜகவுடையது! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் அம்மாநில பாஜக தலைவர் பங்கேற்றத்திற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி, மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி "தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறிவரும் ஒரு பாஜக ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை முதல்வரின் வேலைகளை செய்து வருகிறார். இரு ஆளுநர்களும் தயவு செய்து அரசியலமைப்புச் சட்டத்தை படியுங்கள், இல்லை என்றால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல்வாதிகளாக செயல்படுங்கள். 

புதுச்சேரிக்கு வந்த மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் அவர் வகிக்கும் துறையின் அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தலாம். ஆனால் அனைத்து துறை அதிகாரிகளும் அழைத்து ஆய்வு கூட்டம் நடத்த அவர் ஒன்றும் மத்திய உள்துறை அமைச்சர் இல்லை. இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் பங்கேற்றார். 

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவரை அனுமதித்தது யார்? மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதவி ஏற்கும் பொழுது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். இந்த விவகாரத்திற்கு மத்திய இணை அமைச்சர் முருகன், முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலாளர் ராஜிவ் வர்மா ஆகியோர்தான் பொறுப்பேற்க வேண்டும். 

இந்த விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அமைச்சர் முருகன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரி தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராஜிவ் வர்மாவை நீக்கம் செய்ய வேண்டும். புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருந்தாலும், அவர் போட்டிருக்கும் சட்டையை பாஜகவுக்கு சொந்தமானது. அவர் பாஜகவிற்கு அடிமையாகி விட்டார்" என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanasamy condemns Union Minister Murugan and cm rangasamy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->