ராஜிவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் - முன்னாள் முதல்வர் கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


”மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்று, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தெரிவித்தாவது, ராஜீவ்காந்தி வழக்கில் கைதானவர்களுக்கு தூக்கு தண்டனையை,ஆயுள் தண்டனையாக மாற்றி தற்போது உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது ஏற்புடையதாக இல்லை.

நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றமே மாற்றியது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்.

இல்லையென்றால் காங்கிரஸ் சார்பாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்" என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவிக்கையில், ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு.

எத்தனையோ இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை ஏன் வெளியிடவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாத்துக்கும் அழுத்தம் குடுக்கமுடியாது.

எங்களுக்கும் திமுகவுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. மதசார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் இணைந்துள்ளோம்” என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narayanasamy Say about Rajiv Murder case issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->