மதத்தை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்பது இனி நடக்காது.. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.!
Narayanasamy speech about BJP
ஆதீனங்கள் மடங்களைவிட்டு வெளியே வந்து அரசியல் பேசலாம் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கோயில்களில் நடைபெறும் சில தவறுகளை தடுக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசியதாவது, கோயில்களில் நடைபெறக்கூடிய தவறுகளை தடுக்கும் பணியைத்தான் அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். மத அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக செயல்பட்டு வருவதாகவும் குற்றசாட்டினார்.
மதத்தை வைத்து பாஜக ஆட்சியை பிடிப்பது இனி நடக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஆதீனங்கள் மடங்களைவிட்டு வெளியே வந்து அரசியல் பேசலாம் என்றும் மடத்துக்குள் இருந்துகொண்டே ஆதீனங்கள் அரசியல் பேசுவது சரியல்ல எனவும் கூறியுள்ளார்.
English Summary
Narayanasamy speech about BJP