ஹரியானா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நயாப் சிங் சைனி!...பிரதமர் மோடி, NDA கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாஜக 48 தொகுதிகளையும், காங்கிரஸ் 37 தொகுதிகளையும் கைப்பற்றியது.

இதன் மூலம் ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்ற நிலையில், நயாப் சிங் சைனியே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நயாப் சிங் சைனி சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மகத்தான வெற்றியின் பெருமை, பிரதமரின் கொள்கைகள் மற்றும் அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடே இந்த வெற்றி என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஹரியானா தலைநகர் சண்டிகரில், முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்ற நிலையில், அவருக்கு அம்மாநில ஆளுநர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, அனில் விஜ், கிருஷ்ண பேடி, கிருஷ்ணலால் பன்வார் என 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayab singh saini re instated as haryana cm prime minister modi nda alliance leaders will participate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->