அருந்ததியர் குறித்து சர்ச்சை பேச்சு.! ஆ.ராசா மீதான நடவடிக்கை என்ன.? NCSC நோட்டீஸ்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அருந்ததியர் சமுதாய மக்கள் மலம் அள்ளும் சிறுபான்மையின சமுதாய என சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியிருந்தார்.

இது தொடர்பாக நீதிக்கான மன்றம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவர் தேசிய பட்டியலின ஆணையத்திடம் அளித்த புகாரில் "திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அருந்ததியர் சமுதாய மக்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பேசி இருந்தார்.

குறிப்பாக அருந்ததியர் சமுதாய மக்கள் மலம் அள்ளும் சிறுபான்மையின சமுதாயம் என அம்மக்களை அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட தேசிய பட்டியலின ஆணையம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அருந்ததியர் சமுதாய மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாநகர் காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. தவறும் பட்சத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக மாறு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCSC notice to trichy collector in ARasa spoke about arunthathiyar community


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->