நீட் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் சீமான்!
NEET Issue NTK DMK Seeman
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வாரியது தற்காலிக தீர்மானமா? தேர்தல் நாடகமா? என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "கச்சத்தீவை கொடுத்ததற்குப் பதிலாக, இந்தியா இலங்கையிடம் ஏக்கர் கணக்கில் நிலம் பெற்றுக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். அந்த நிலம் எங்கே?" என கேள்வி எழுப்பிய அவர், மீனவர்களுக்கு பாதுகாப்பில்லாமல் தமிழக அரசு அமைதியாக இருப்பதையும் கடுமையாக விமர்சித்தார்.
"தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது, கேரள மீனவர்கள் தாண்டினால் நடவடிக்கையா?" எனக் கேள்வி எழுப்பிய சீமான், கச்சத்தீவை மீட்கும் முயற்சி வெறும் அரசியல் நாடகமாக மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கும், அரசியல் கணக்குக்கணிப்புக்கும் உள்ள தொடர்பை வன்மையாக சுட்டிக்காட்டிய அவர், "நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்பதும் தமிழக அரசுக்கு தெரியும். இருந்தும், தேர்தல் காலத்துக்கு மட்டும் தீர்மானம் நிறைவேற்றுவது ஏமாற்று அரசியல்," என்று விமர்சித்தார்.
மேலும், இதனால் நீட்டுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். இவர்களின் அரசியல் நாடகத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
NEET Issue NTK DMK Seeman