நீட் விலக்கு மசோதா.. தகவலை தர முடியாது - ஆளுநர் மாளிகை.! - Seithipunal
Seithipunal



தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் விதமாக ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறும் வகையில் இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்". என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார்.

இதற்கு கடந்த 11-ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில், "மசோதா, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது" என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet issue tn governor RTI info


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->