நீலகிரியில் முடியுமா...? காயத்ரிக்கு சூரியா சிவா சவால்... பாஸ்.. அது தனி தொகுதி... கலாய்க்கும் நெட்டிசன்கள்...!!
Netizens are trolling Trichy Surya post on twitter
தமிழக பாஜகவில் ஏற்பட்ட ஊட்கட்சி பூசல் காரணமாக சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராமன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடந்த ஜனவரி 15ம் தேதி சவால் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்டர் பக்கத்தில் "ஈரோடு இடை தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்கிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக் கொள்வீர்களா..? என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு தமிழக பாஜகவின் ஓபிசி அணி தலைவராக இருந்து அக்கட்சியில் இருந்து விலகிய திருச்சி சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காயத்ரி ரகுராமின் சவாலுக்கு பதிலடி தந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில் "நீ கூப்பிடுற இடத்தை எல்லாம் வரத்துக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க..? தைரியம் இருந்தால் அண்ணன் சவுக்கு சங்கர் மாதிரி உதயநிதி எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு. இல்லையென்றால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் எல்.முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.
அதை விட்டுட்டு தேர்தலில் நிற்க விருப்பமில்லாத வரை வாருங்கள் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லுவது சரியா? நான் இந்த விவாதத்திற்கு வருவது தேவையற்றது. ஆனால் நீங்கள் கொடுக்கக்கூடிய பேட்டியில் எல்லா இடத்திலும் என் பெயரை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்" என பதிலடி தந்துள்ளார்.
ஆனால் இந்த பதிலடியில்டி திருச்சி சூரியா தனது 6ம் அறிவை உபயோகப்படுத்த மறந்து விட்டார். ஏனெனில் அவர் காயத்ரி ரகுராமிடம் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் எல்.முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு என சவால் விட்டிருந்தார். ஆனால் தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் தலைவராக இருந்த சூரியா சிவாவுக்கு அது தனி தொகுதி என்றும் அதில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின வேட்பாளர் மட்டுமே நிற்க முடியும் என்பது அவரின் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது. இதனை நோட் செய்த நெட்டிசன்கள் திருச்சி சூர்யாவை கலாய்த்து வருகின்றனர்.
English Summary
Netizens are trolling Trichy Surya post on twitter