CM நேரில் அழைத்து பாராட்டு! ஒரு வாரத்தில் கொலை மிரட்டல்? என்ன ஆச்சு நிமல் ராகவனுக்கு?!
nimal ragavan cm stalin
தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு நீர் நிலைகளை தூர்வாரி சீர்படுத்தி வரும் சுற்றுசூழல் செயற்பாட்டாளர் நிமல் ராகவன் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில், "இதுல இறங்குறப்போ இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் உள்ள வந்தேன். அதிகபட்சமாக என்ன பண்ணுவீங்க? என்னைய கொலை பண்ணுவீங்க அவ்ளோதானே முடியும். நீங்க கொல்றது ஒருத்தன, ஆனா நான் உறுவாக்கி வச்சிருக்கது எத்தன பேருன்னு நான் போன அப்புறம் தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நிமல் ராகவனின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனக்கு அரசு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நான் பாதுகாப்பாக இருக்கிறேன், உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் அக்கறைக்கு மனமார்ந்த நன்றிகள். என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனை ஆதரிக்க நீங்கள் அனைவரும் முன்வந்து ஆதரவளித்து குரல் கொடுத்ததற்கு மகிழ்ச்சி. அரசாங்கம் உடனடியாக பதிலளித்தது, அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பையும் வழங்கியுள்ளனர். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எந்த சூழ்நிலையிலும் எங்கள் பணி ஒருபோதும் நிற்காது. வரும் சனிக்கிழைமை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே எங்களது 255வது நீர்நிலை சீரமைக்கும் பணிகளை தொடங்குகிறோம். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.