மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன? மறைமுகமாக சாடிய நிர்மலா சீதாராமன்!
Nirmala Seetharaman Say About Family Politics DMK BJP
மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன? என்று, குடும்ப அரசியலை கடுமையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
சென்னை கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அவரின் அந்த உரையில், மீனவர்கள் ஏற்றுமதி தொழிலில் கவனம் செலுத்தினால் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.
பாஜகவில் திறமைக்கும், உழைப்புக்கு தான் உழைப்புக்கும் தான் வாய்ப்பு வழங்குவோம்.
பாஜகவில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, கட்சி நிர்வாகிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவுக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, அண்ணாமலை காணொளி மூலம் வலியுறுத்தி கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nirmala Seetharaman Say About Family Politics DMK BJP