தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.!! நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ள  பாதிப்புகள் போது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது "தோராயமாக ஒரு வருடத்திற்கு செய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி காலை தகவல் கிடைத்தவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டோம். பாதிப்பை அறிந்தவுடன் கூடுதல் உதவி வழங்க நடவடிக்கை எடுத்தோம். சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் மிகவும் நவீனமானது. கனமழை எச்சரிக்கையை 5 நாட்கள் முன்கூட்டியே அறிவித்தது. ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் கனமழை குறித்து கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை முறையாக கிடைக்கவில்லை எனக் கூறுவது ஏற்க முடியாது.

கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்று இருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இவ்வளவு மழை பெய்யும் என யாரும் சரியாக கனித்துக் கூற முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வானிலை ஆய்வு மையத்தை குற்றம் சாட்டுவது ஏன்? மழை எச்சரிக்கையின் அடிப்படையில் எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. தேசிய பேரிடர் ஆக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தியாவில் இதற்கு முன்பு எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை.

வெள்ள தடுப்பு நிதியை முறையாக பயன்படுத்தி இருந்தாலே பாதிப்பை தவிர்த்திருக்கலாம். மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை. சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்காக செலவிடப்பட்ட 4000கோடி என்னவானது? மழைக்கு முன்பு 92% வடிகால் பணி முடிந்ததாக கூறினார்கள். மழைக்கு பின் 45% பணிகள் நிறைவு என மாற்றி பேசுகிறார்கள். நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் திணறும்போது நிவாரண பணிகளில் ஈடுபடாமல் டெல்லியில் இருந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது" என கடுமையாக  செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala Sitharaman said tn flood cannot be declared as national calamity


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->