பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? வேதனையை வெளிபடுத்திய நிதீஷ்குமார்!!
Nitish Kumar says there is no alliance with BJP
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இவர் பீகாரில் மத்திய பல்கலைக்கழகம் அமைய மத்திய பாஜக அரசுதான் காரணம் எனவும், முந்தைய காங்கிரஸ் அரசு உதவவில்லை எனவும் பேசி இருந்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகுதான் பல்கலைக்கழகம் அமைந்தது என மகாத்மா காந்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியிருந்தார். இதனால் பாஜக கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார் இணைவாரா? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே பட்டமளிப்பு விழா குறித்து வெளியான செய்தி தாள்களில் மத்திய பாஜக அரசு நிதிஷ்குமார் பாராட்டி பேசி உள்ளதால் மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி தீயாய் பரவத் தொடங்கியது நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ்குமாரிடம் பட்டமளிப்பு விழாவில் பேசிய உரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நிதீஷ்குமார் "மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எனது பேச்சு பற்றி வெளியான செய்திகளை படித்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். அப்போது காங்கிரஸ் அரசாங்கம் கயாவில் மட்டுமே ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை அமைக்க விரும்பியதை நான் மேற்கோறு காட்டி பேசி இருந்தேன். நான் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
English Summary
Nitish Kumar says there is no alliance with BJP