நெல்லை திமுக மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!!
no confidence resolution on thirunelveli DMK Mayor
நெல்லை திமுகவில் உட்ட்காட்சி பூசல் பல மாதங்களாக இருந்து வரும் நிலையில் நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிரே அதிருப்பதில் உள்ள திமுக கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 51(2)(3)-ன் படி திருநெல்வேலி மாநகராட்சி, மாமன்ற உறுப்பினர்களால் மாமன்றத் தலைவர் அவர்கள் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் 12.01.2024 அன்று காலை 11.00 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக இராஜாஜி மண்டப மாமன்றக் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது" என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
English Summary
no confidence resolution on thirunelveli DMK Mayor