பூத்தில் இருக்கவே ஆள் இல்லை. எப்படி அண்ணாமலை வெற்றி பெறுவார் -கே. எஸ். அழகிரி!!
no one in the booth How Annamalai win KS Alagiri
தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் கே.எஸ் அழகிரி பேசுகையில், ராகுல் காந்தி மற்றும் மு.க ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக தேர்தல் பணியை முன்னெடுத்தார்கள். இலவச பேருந்து திட்டம், மாதம் ரூ.1000 திட்டம் போன்ற பெண்களுக்குகாண பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிரதமர் மோடி பிரிவினவாத அரசியலை கையில் எடுத்துள்ளார்.பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியவில்லை. தமிழக மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஒருபோதும் மத வெறியர்களாக மாற மாட்டார்கள். பிரதமர் மோடி தனது கணக்கு தமிழ்நாட்டில் இருந்து தொடங்குவோம் என்று கூறி வருகிறார். அவர்களை நம்பிக்கை நிச்சயமாக பலிக்கும்.
பாஜகவின் நாடுதழுவிய தோல்வி கணக்கை இங்கிருந்து தான் தொடங்குவார்கள். இதற்கு கோவை தொகுதியே சாட்சி. கோவையில் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவிற்கு பூத்தில் அமர கூட இல்லை. அண்ணாமலையின் தோல்வி எழுதி வைக்கப்பட்டது என்று பேசினார்.
English Summary
no one in the booth How Annamalai win KS Alagiri